Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியை தண்டித்ததால் உயிரிழந்த சிறுமி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2009 (11:02 IST)
டெல்லியில் ஆசிரியை அடித்ததால், மயக்கம் அடைந்த சிறுமி, சுயநினைவை இழந்து பின்னர் உயிரிழந்ததால், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை முதல் கோமா நிலையில் இருந்த 10 வயது சிறுமி, நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், ஆசிரியை மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

சிறுமி உயிரிழந்ததால், டெல்லியில் பெரும் பதற்றம் நிலவியது.

டெல்லி நகராட்சி சார்பில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லி நரேலா பகுதியில் என்.டி தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்தவர் ஷானு கான்.

சிறுமி ஷானு சரியாகப் படிக்கவில்லை என்று கூறி வகுப்பு ஆசிரியை சிறுமியின் தலையில் அடித்ததுடன், சுமார் 2 மணி நேரம் வரை வெயிலில் நிற்க வைத்தாராம். வெயிலில் நிற்க முடியாமல் மயக்கம் அடைந்த சிறுமியை அவரது சகோதரி பார்த்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமானதால், லோக் நாயக் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஷானு மாற்றப்பட்டார். என்றாலும், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுமியை அடித்ததாகக் கூறி ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார். பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு..!

இந்த கைது பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயந்து பின்வாங்கப்போவதில்லை.. அண்ணாமலை

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

திருமணமான 5 நாட்களில் மணமகள் மாயம்! நகை, பணம் திருடி சென்றதால் அதிர்ச்சி..!

Show comments