Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (12:00 IST)
ஸ்லம்டாக் மில்லியனர் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், அந்தப் படக் குழுவினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் உட்பட ஸ்லம்டாக் படத்தில் பணியாற்றிய 8 பேருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசைக்காக 2 விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கும், பாடலாசிரியர் குல்சாருக்கும், ஒலிக்கலவைக்காக விருது பெற்றுள்ள பூக்குட்டிக்கும் குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் `ஸ்மைல் பிங்கி' படம் மிகச் சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும் பிரதிபா பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

Show comments