Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாக்குதல் : ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிக்கை தா‌க்க‌ல் - அரசு ‌வழக்கறிஞர்

Webdunia
ஞாயிறு, 15 பிப்ரவரி 2009 (16:00 IST)
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அடுத்த ஓரிரு நாட்களில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் தெரிவித்துள்ளார்!

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பாக உஜ்வால் நிகாம் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நிகாம் கூறுகையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் அமீர் கஸாபிற்கு எதிராக போதுமான ஆதாரங்களை புலனாய்வு அமைப்பு அளித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான அனைத்து ஆதாரங்களையும் புலனாய்வு அமைப்பு அளித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் நிகாம் கூறியுள்ளார்.

கஸாப் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவதற்கு அவருடைய ஏழ்மையும், கல்வியிண்மையும் ஒரு காரணம் என்று கூறிய நிகாம், மதம் குறித்த அடிப்படைகள் தவறாகக் கூறப்பட்டு கஸாப் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தம்பி மேல இருக்க அன்பு வேற.. அரசியல் வேற..! - விஜய் குறித்து சீமான் பேச்சு!

மருத்துவர் தாக்குதல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

ஸ்டான்லி மருத்துவமனையில் இன்னொரு மருத்துவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி தகவல்..!

சொர்க்கத்தில் இருந்து இந்திரா காந்தி வந்தாலும் காஷ்மீருக்கு 370வது பிரிவு கிடைக்காது: அமித்ஷா

2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

Show comments