Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜூவிடம் விசாரணை: செபி மனு பிப்.9-க்கு ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:15 IST)
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராம ராஜூ ஆகியோரிடம் விசாரணை நடத்தக் கோரும் இந்திய பங்குச் சந்தை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பான செபி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஹைதராபாத் நீதிமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சத்யம் நிறுவனத்தில் சுமார் 7,100 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றிருப்பதை ஒப்புக் கொண்டு தலைவர் பதவியில் இருந்து ராமலிங்க ராஜூ விலகினார்.

தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ராமராஜூ ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில சிபிசிஐடி காவல்துறையினர் ராமலிங்க ராஜூ, ராம ராஜூ, தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் வாக்குமூலம் வாங்க அனுமதி கோரி செபி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசயன ரெட்டி, இதுகுறித்து ராஜூ சகோதரர்களுக்கும், அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறை கண்காணிப்பாளருக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார். அவர்கள் வரும் 9ஆம் தேதிக்கும் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும், இதன் மீதான அடுத்த விசாரணை 9ஆம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments