Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (14:00 IST)
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 61ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புதுடெல்லியில் இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்களும் தொடங்கப்பட்டன.

காலை 11 மணிக்கு நாடு முழுவதும் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுடெல்லியில் காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பள்ளிக்குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொழுநோய் ஒழிப்பு பிரசாரமாக தொழுநோய் எதிர்ப்பு வாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

குஜராத்தில் மகாத்மா வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் சர்வமத பிரார்த்தனை உட்பல பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குஜராத்தில் 23 மாவட்ட சிறைகளில் உள்ள கைதிகளுக்கு கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments