Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.1ம் குறையலாம்

Webdunia
ஞாயிறு, 25 ஜனவரி 2009 (15:32 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1ம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், கடந்த டிசம்பர் இறுதி வாரம் முதலே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளுக்கான விலைகளை குறைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை விலை குறிப்பை முறைப்படி அறிவிப்பதற்கான நாள் இன்னும் முடிவாகவில்லை என்றார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1ம் குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலையில் குறைப்பு பற்றி எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உருளை ஒன்றுக்கு ரூ.20 முதல் 22 வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டன. இந்த மாதமும் பெட்ரோல், டீசல்கள் விலைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலையில் எண்ணெய் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான கோரிக்கை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்..!

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Show comments