Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை இலக்கைத் தாக்கவில்லை

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:54 IST)
ராஜஸ்தானின் போக்ரான் பகுதியில் இந்திய ராணுவம் நேற்று சோதனைக்கு உட்படுத்திய புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை தாக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், “போக்ரான் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைத் சோதனை இறுதிக்கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை. அதுபற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள ் ” என்றனர்.

அணு ஆயுதத்துடன், ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று 290 கி.மீ. தொலைவரை உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை பிரம்மோஸ் ஏவுகணைக்கு உண்டு.

இதன் புதிய ரகத்தை (தரைவழித் தாக்குதலுக்கு பயன்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன) போக்ரான் பகுதியில் நேற்று இந்திய ராணுவம் சோதித்துப் பார்த்த நிலையில், திட்டமிட்ட இலக்கை ஏவுகணை தாக்கவில்லை என இன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments