Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3‌ஜி அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் : ஆ. ராசா

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (13:46 IST)
அதிநவீன மூன்றாம் தலைமுறை (3‌ஜ ி) அலைவரிசை ஒதுக்கீடு மின்னணு முறையில் ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அய‌ல்நாடுவாழ் இந்தியர் மாநாட்டில ், அமெரிக்க இந்தியர்கள் கருத்துப் பகிர்வில் பேசிய அவர், இந்த ஏலம் விடும் பணியில் நிபுணர் முகமையின் ஆலோசனை நாடப்படும் என்றார்.

ப ி. எஸ ். என ். எல ். மற்றும் எம ். ட ி. என ். எல ். நிறுவனங்களுக்கு மூன்றாம் தலைமுறை அலைவரிசையும், அகண்ட அலைவரிசையும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பில் நாடு வேகமாக முன்னேறி வருவதாகவும், இந்த வாய்ப்பை அய‌ல்நாடுவாழ் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசு அண்மையில் அறிவித்த செமிகன்டக்டர் கொள்கை பற்றி குறிப்பிட்ட ராசா, இதுவர ை இத்திட்டத்திற்கு 17 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், சுமார் 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments