Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையாக வகையி‌ல் தற்காலிக குடியேற்ற அனுமதி : ‌பிரதம‌ர்

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (20:29 IST)
வெளிப்படையாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் எளிமையாக வகையிலும் தற்காலிக குடியேற்ற அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

சென்னையில் இன்று, அய‌ல்நாடுகளில் வாழும் இந்தியர்களுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் அறிவுசார் கட்டமைப்பு இணைய தளத்தை பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைத்தார்.

அ‌ப்போது பே‌சிய ‌பிரதம‌ர் இந்த இணைய தளத்தின் மூலமாக அய‌ல்நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இந்திய அரசுடனும் சம்பந்தப்பட்ட தூதரகத்துடனும் தொடர்புகளை வலுப்படுத்த இயலும் என்றார்.

இந்திய வம்சா வ‌ ழியினருக்கான நிரந்தர இ‌ந்‌திய‌ர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பயன்பெறுவதற்கு உரிய வசதிகள் இந்த இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அய‌ல்நாடுகளில் பணிபுரியும் சுமார் 5 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

அய‌ல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் ஸ்மார்ட் கார்டு பற்றிய அனைத்து விவரங்களும் இந்த இணைய தளத்தில் உள்ளன, தற்காலிக குடியுரிமை அல்லது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான அனுமதி போன்றவை இதன் மூலம் வழங்கப்படுகிறது.

வெளிப்படையாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் எளிமையாக வகையிலும் தற்காலிக குடியேற்ற அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விண்வெளி நிலையம்: இஸ்ரோ விண்வெளியில் ஆய்வகம் அமைப்பது எதற்காக? அதில் என்ன செய்யும்?

வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! - வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்! - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!

ஆதாருக்கு விண்ணப்பித்தால் தாசில்தார் ஒப்புதல் தேவை? - அமலுக்கு வரும் புதிய நடைமுறை!

நவராத்திரியை முன்னிட்டு குஜராத்திகள் தாண்டியா நடனமாடி துர்கா தேவியை வழிபட்டனர்!

Show comments