Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 அய‌ல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது இஸ்ரோ

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:11 IST)
இந்திய விண்வெள ி ஆ‌ய்வு மைய‌ம் இந்த ஆண்டு 4 அய‌ல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று அதன் வர்த்தகப்பிரிவு நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அ‌ந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். ஸ்ரீதரரெட்டி பெங்களூரு‌வில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிங்கப்பூர், நெதர்லா‌ந்து, இத்தாலி, அல்ஜீரியா ஆகிய நா‌ன்க ு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் நமக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் நாம் விண்வெளி வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற முடியும்.

சர்வதேச அளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் குறைந்த கட்டணம் வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறது. செயற்கைக்கோள் எடையில் கிலோவுக்கு 20 ஆயிரம் யூரோதான் நா‌ம ் கட்டணமாக நிர்ணயித்து உள்ளோம். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த கட்டணமாகும்.

எனவே, 2009இல் நாம் விண்வெளித்துறையில் வர்த்தக ரீதியாக முக்கிய இடத்தை நிச்சயமாக பெறுவோம் என்றார் ஸ்ரீதரரெட்டி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments