Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌யி‌ல்வே வருவா‌ய் 7.93 ‌விழு‌க்காடு உய‌ர்வு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (14:47 IST)
ரயில்வேத் துறை இ‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் 10ஆ‌ம் தேதி வரையிலான கால‌த்‌தி‌‌ல் ரூ.2,084.61 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.1,931.39 கோடி) ஒப்பிடுகையில் இது 7.93 ‌விழு‌க்காட ு கூடுதலாகும்.

சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு டிச‌ம்ப‌ர் 1 ஆ‌ம் தே‌தி முத‌ல் 10 ஆ‌ம் தேதி வரை ரூ.1,412.51 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.1,314.38 கோடி மட்டுமே. இது 7.47 விழு‌க்காடு கூடுதலாகும்.

ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக டிச‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் 10ஆ‌ம் தேதி வரை ரூ.600.77 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 8.46 ‌விழு‌க்காடு அதிகமாகும். கட‌ந்த ஆ‌ண்டு இதே கால‌த்‌தி‌ல் ரூ.553.90 கோடி ம‌ட்டுமே ‌கிடை‌த்தது.

பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டு ரூ.49.15 கோடியாக இரு‌ந்தது. இ‌ந்த ஆ‌ண்டு இது ரூ.55.93 கோடியாக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது 13.79 ‌விழு‌க்காடு உய‌ர்வாகு‌ம்.

டிச‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் 10ஆ‌ம் தேதி வரை 20.28 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். கடந்த ஆண்டில் இதே கால‌த்‌தி‌ல் 18.69 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்து‌ள்ளனர். இது 8.50 ‌விழு‌க்காடு அதிகரிப்பாகும்.

புறநகர் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 10.71 கோடியில் இருந்து 11.17 கோடியாக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது 4.32 ‌விழு‌க்காடு கூடுதலாகு‌ம். மற்ற ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 7.98 கோடியில் இருந்து 9.11 கோடியாக அதிகரித்துள்ளது. இது 14.12 ‌விழு‌க்காடு வளர்ச்சியாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments