Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (11:39 IST)
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.

திட்டமிட்டபடி காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கினாலும் குளிர் காரணமாக பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எனினும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவு சூடிபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தேர்தலில் 16.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.

இன்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 31 பெண்கள் உட்பட 393 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 151 வேட்பாளர்கள் சுயேச்சைகள்.

இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் சபாநாயகர் தாரா சந்த் உள்ளிட்ட சிலர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். இதில் பரூக் அப்துல்லா ஹஸ்ராத்பல், சோனாவார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஸ்ரீநகர், சம்பா, ஜம்மு ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு பணியில் மத்திய காவல்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments