Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌ம்- தாமதமான நடவடி‌க்கை: அ‌த்வா‌னி!

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (18:32 IST)
பய‌ங்கரவாத‌ நடவடி‌க்கைகளை‌த ் தடு‌த்து‌த ் தே‌‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ை உறு‌த ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டு‌ள் ள இர‌ண்ட ு ச‌ட்ட வரைவுகளு‌க்கு‌ம ் தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி ஆதரவ‌ளி‌க்கு‌ம ் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்து‌ள்ள எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர் அ‌த்வா‌ன ி, இது ‌மிகவு‌ம் தாமதமான நடவடி‌க்கை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

பயங்கரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படவுள்ள தேச புலனாய்வு முகமைக்கான சட்ட வரைவின் மீதும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவின் மீதும் நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க. தலைவ‌ர் எ‌ல்.கே. அ‌த்வா‌னி, பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌‌ப்ப‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள தாமத‌த்தா‌ல் நமது நாடு ஏராளமான சேத‌ங்களை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ள்ளது. எனவே ம‌த்‌திய அரசு தனது தவறை ஒ‌ப்பு‌‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

எ‌ல்லை தா‌ண்டிய பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க கடுமையான ச‌ட்ட‌ங்க‌ள் தேவை எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியதுட‌ன், இ‌ந்‌தியாவுடனான போ‌ரி‌ல் மூ‌ன்று முறை தோ‌ற்று‌வி‌ட்டதா‌ல், மறைமுக‌ப் போ‌ரி‌ல் அ‌ண்டை நாடு ஈடுப‌ட்டு வரு‌கிறது எ‌ன்று பா‌கி‌ஸ்தானை‌க் கு‌றி‌ப்‌பிடாம‌ல் அ‌த்வா‌னி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

தவறாக‌ப் ப‌ய‌ன்படு‌த்த‌ப்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்ற கரு‌த்தை‌த் ‌திரு‌ம்ப‌த் ‌திரு‌ம்‌ப‌க் கூ‌றி வ‌ந்த ம‌த்‌திய அரசு, ‌நீ‌ண்ட தாமத‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு கடுமையான பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் தேவை எ‌ன்று கூறுவது, "பழைய குடுவை‌யி‌‌ல் பு‌திய மதுபான‌‌ம ்" போல உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய அ‌த்வா‌னி, பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க ஒ‌வ்வொரு நாடு‌ம் ச‌ட்ட‌ரீ‌தியான த‌னி‌த்த‌னி அமை‌ப்பு‌க்களை உருவா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஐ.நா.‌வி‌ன் ஆலோசனையை‌க் கடை‌‌சியாக‌க் கடை‌பிடி‌க்கு‌ம் நாடுக‌ளி‌‌ல் ஒ‌ன்றாக இ‌ந்‌தியா உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ன் ஆலோசனை 2001 இ‌ல் தர‌ப்ப‌ட்ட ‌பிறகு, அமெ‌ரி‌க்கா, இ‌ங்‌கிலா‌ந்து ஆ‌கிய நாடுக‌ள் உடனடியாக ‌சிற‌ப்பு‌ச் ச‌ட்ட‌ங்களை இய‌ற்‌றியு‌ள்ளன. ஆனா‌ல் நமது அரசு இ‌ப்போதுதா‌ன் தனது கு‌ம்பக‌ர்ண‌த் தூ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்து எழு‌ந்து‌ள்ளது எ‌ன்றா‌ர் அ‌த்வா‌னி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

Show comments