Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்றத்தில் 49 ஆயிரம் வழக்குகள் நிலுவை‌யி‌ல் உ‌ள்ளது : அமை‌ச்ச‌ர் தகவ‌ல்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (18:50 IST)
நடப்பாண்டு ஆகஸ்ட் 31ஆ‌ம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்பட ி, உச்ச நீதிமன்றத்தில் 48,838 வழக்குகளு‌ம ், உயர் நீதிமன்றங்களில் 38,82,074 வழக்குகளும், துணைநிலை நீதிமன்றங்களில் 2,52,40,185 வழக்குகளும் நிலுவையில் உள்ளதா க மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எச ். ஆர ். பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவ‌ர் இ‌த்தகவலை‌த் தெரிவித்துள்ளார்.

மேலு‌ம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை சீரான கால இடைவெளியில் மாற்றியமைக்கப்படுகிறது. 2006 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 163 நீதிபதி பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்திற்காக, நடப்பாண்டு ஏப்ரல் 29ஆம் தேதியன்று மக்களவையில் உச்சநீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதாவை அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த மசோதா உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 25இ‌ல் இருந்து 30ஆக அதிகரிக்க வழிவகுக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதி யாரும் இல்லை. நமது நாட்டில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 44 பெண் நீதிபதிகள் பணியாற்றுகின்றனர ்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 217-ன் படி உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நியமனத்தில் எந்த பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை.

இச்சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தகுதியான பெண்களை கண்டறியுமாறு மத்திய அரசு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறது எ‌ன்று‌ம் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments