Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.பி: 2-வது முறை முதல்வரானார் சவுகான்

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (18:10 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 2ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்.

தலைநகர் போபாலில் பிஹெச்ஈஎல் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சவுகானுக்கு ஆளுநர் பல்ராம் ஜாக்கர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே இன்று பதவியேற்றுள்ளார். மற்ற அமைச்சர்கள் அடுத்து வரும் நாட்களில் பதவியேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அல்லாத ஒருவர் 2ஆவது முறையாக முதல்வர் பதவியேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சவுகான், ராய்ப்பூரில் நடைபெற்ற சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டீஸ்கர் முதல்வராகப் பொறுப்பேற்ற ராமன் சிங்கும் போபாலில் நடைபெற்ற பதவியேற்பில் பங்கேற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments