Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை காவல்துறையிடம் லஸ்கர் பயங்கரவாதி!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:47 IST)
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிக்க லஸ்கர் பயங்கரவாதி ஃபாஹேம் அன்சாரியை மும்பை கொண்டு செல்ல உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி உ.பி. மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை ( Central Reserve Police Force - CRP F) முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ்பாஹேம் அன்சாரி கைது செய்யப்பட்டு காவலில் உள்ளார். இவர்களிடம் மும்பை காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் விசாரணை நடத்தியது.

ஆயினும் மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த மும்பை கொண்டு செல்ல அனுமதிக்குமாறு மும்பை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் அதற்கு இன்று அனுமதி அளித்தது.

மும்பை மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவ அந்நகரின் வரைபடம், முக்கிய இடங்கள், அவைகளின் வீடியோக்கள் ஆகியவற்றை லஸ்கர் இயக்கத்திற்கு அன்சாரி அனுப்பி வைத்த விவரம் கிடைத்ததையடுத்து, மேற்கொண்டு விசாரிக்க மும்பை காவல் துறை முடிவு செய்துள்ளது.

மற்றொரு பயங்கரவாதியான சபாஹூத்தின் லஸ்கர் இயக்கத்தில் அன்சாரிக்கும் மூத்த உறுப்பினர். பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர். இவரையும் மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிக்க அடுத்த வாரம் மனு செய்ய மும்பை காவல் துறை முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments