Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பேசி அலைக் கற்றை ஒதுக்கீடு: மத்திய அரசிடம் விளக்கம் கோருகிறது நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (13:42 IST)
எந்த அடிப்படையில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு அலைக ் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை விளக்கிடுமாறு மத்திய அரசிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

டெலகாம் வாச்டாக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், எந்த ஒரு நடைமுறையோ, கொள்கையோ கடைபிடிக்கப்படாமல் அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதல் அலைக் கற்றை ஒதுக்கீடு (Spectrum allocation) செய்யப்பட்டதற்கும் உரிய கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடுதல் அலைக் கற்றையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதனை ஒதுக்கீடு செய்வதில் டிராய் என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அந்த அமைப்பிற்காக வாதிட்ட வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறினார்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி எஸ். முரளிதர் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, இந்த மனுவிற்கு விளக்கமளிக்குமாறு மத்திய அரசிற்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட செல்பேசி நிறுவனங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்ற அமர்வு நிராகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments