Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி உற்பத்தி 9.57% அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (18:35 IST)
‌ நில‌க்க‌ர ி உ‌ற்ப‌த்‌த ி இ‌ந் த ஆ‌ண்ட ு 9.57 சத‌வீத‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேனி நிலக்கரி தொழிற்சால ை ஆகியவ ை கட‌ந்த அக்டோபர் மாதம ் 37.31 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன. இதற்கான இலக்கு 37.71 மில்லியன் டன்னாகும்.

இந்த நிறுவனங்கள் இணைந்து 2007-ம் ஆண்டு 34.05 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 9.57 சதவீதம் உற்பத்தி உயர்ந்தது. மின்சாரத் தேவைக்காக சென்ற மாதம் 27.77 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது.

2008-09- ம் ஆண்டு இந்திய நிலக்கரி நிறுவனம், சிங்கரேனி நிலக்கரி நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றுக்காக ரூ.6,597 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற மாதம் முடிய ரூ.1,806.64 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நிலக்கரியை மின்னணு முறையில் ஏலம் விடும் பணியை இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கொண்டது. இதில் சுமார் 32.26 லட்சம் டன் நிலக்கரி ஏலம் விடப்பட்டது. ஆயினும் நிலக்கரி நிறுவனங்களுக்கு சுமார் 40.1 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

நிலக்கரியைப் பயன்படுத்தி சென்ற மாதம் 1,171.71 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கான இலக்கு 1,075 மில்லியன் யுனிட் ஆகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments