Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ளிஹார் அணை பிரச்சனை: இந்திய‌க் குழு‌வின‌ர் பா‌கி‌ஸ்தா‌ன் பயண‌ம்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (15:24 IST)
‌ சீனா‌ப ் ந‌தி‌யி‌ன ் குறு‌க்க ே இ‌ந்‌திய ா க‌ட்டியு‌‌ள் ள ப‌க்‌ளிஹா‌ர ் அணையா‌ல ் தங்களுக்கு வரவேண்டிய ந ீ‌ ரி‌ன ் அளவு குறைந்துவிட்டத ு எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு கு‌றி‌த்த ு ஆரா ய, இ‌ந்‌தி ய ‌ நீ‌ர்வ ள ஆணைய‌ர ் தலைமை‌யிலா ன குழு‌வின‌ர ் பா‌கி‌ஸ்தா‌ன ் செ‌ல்லவு‌ள்ளன‌ர ்.

பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான 6 பே‌ர ் கொ‌ண் ட குழ ு‌ வின‌ர ் கட‌ந் த அ‌க்டோப‌ர ் 22 ஆ‌ம ் தே‌த ி பக்ளிஹார் அணைக்குச் சென்று பார்வையிட்டதையடு‌த்த ு, இ‌ந்‌திய‌க ் குழு‌வின‌ர ் வரு‌கி ற ச‌‌னி‌க்‌கிழம ை பா‌கி‌ஸ்தா‌ன ் செ‌ல்லவு‌ள்ளன‌ர ்.

இ‌ந்‌தி ய ‌ நீ‌ர்வ ள ஆணைய‌ர ் ர‌ங்கநாத‌ன ் தலைமை‌யி‌லா ன இ‌ந்த‌க ் குழு‌‌வின‌ர ், பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல ் ‌ சீனா‌ப ் ந‌த ி பாய‌க்கூடி ய ப‌ல்வேற ு இட‌ங்களு‌க்கு‌ம ் செ‌ன்ற ு ஆ‌ய்வ ு செ‌ய்யவு‌ள்ளன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு, இ‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷ ா, பக்ளிஹார் அணையா‌ல ் சீனாப் நதியில் தங்களுக்கு வரவே‌ண்டிய நீர் வரத ்‌ தி‌ல் நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளா‌ர்.

இது இருநாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள அவ‌ர், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) ரூபாய் என்றா‌ர ்.

மு‌ன்னதா க, இதனை மறுத்துள்ள இந்தியா, பக்ளிஹார் அணை கட்டியதால் நீர் வரத்து குறையவில்லை என்றும், இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால்தான் சீனாப் நதியில் நீர்வரத்து குறைந்ததற்கு உண்மையான காரணமென்றும் கூறியுள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாற்றையடுத்து உலக வங்கியின் நிபுணர் லாஃபிட்டி பக்ளிஹார் அணையை ஆய்வு செய்து, அணைக் கட்டுமானத்தில் எந்த அத்துமீறலும் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments