Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்க மத்திய அரசு அறிவுறு‌த்த‌ல்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (05:33 IST)
குண்டுவெடிப்புகள் நடந்த பகுதிகளில் தடவியல் ஆதாரங்களை சேகரிக்கும் வரை அந்த இடத்தில் வேறு எந்த நிகழ்வும் ஏற்படாமல் பாதுகாக்குமாறு மாநில அரச ுகளு‌க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது!

இதுகுறித ்த ு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய மத்திய உள்துறைச் செயலர் மதுகூர் குப்தா, குண்டுவெடிப்புகள் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என்றும், குற்றச் செயலிற்கான ஆதாரங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால், தடவியல் ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாப்பப்படும் என்று கூறினார்.

சில மாநிலங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடங்களை பாதுகாக்கத் தவறியதையடுத்து, தேச பாதுகாப்பு படை நிபுணர்கள் வருவதற்கு முன்னதாகவே அந்த இடங்களில் இருந்த தடவியல் ஆதாரங்கள் அழிந்துவிட்டதாக வந்த தகவல்களை அடுத்து இந்த அறிவுறுத்தலை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

மேலும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்குள் அனுமதியற்ற எந்த நபர்களையும் அனுமதிக்கக் கூடாது என்றும் மதுகூர் குப்தா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments