Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ர்‌த்தக மு‌த்‌திரை வரைவு : அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2008 (04:25 IST)
வ‌ர்‌த்த க மு‌த்‌திர ை ( டிரே‌ட ் மா‌ர்‌க ்) வரைவ ு 2007- ல் சில திருத்தங்கள் செ‌ய்த ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்வத‌ற்க ு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதுகு‌றி‌த்த ு அமை‌ச்சரவை‌யி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவ ு கு‌றி‌த் த ‌ விவர‌ம ் வருமாற ு :

மத்திய வர்த்தக அமைச்சகத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உறுப்பு நாடுகளில் இந்திய வ‌ர்‌த்த க முத்திரைக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளின் வ‌ர்‌த்த க முத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வ‌ர்‌த்த க மு‌த்‌திர ை உ‌ரிம‌ம ் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறுவதை ஊக்குவிப்பதோடு கிளைகள் அமைக்கவும் ஊக்கமளிக்கப்படுகிறது. தவிர உலகளவில் இந்திய ஐபிஆர் முறையில் ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகை கிடைக்கிறது.

கடந்த 2007, பிப்ரவரி 8-ம் தேதி, டிரேட் மார்க் (திருத்தம்) மசோதா 2007-க்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. இதன்படி 2007 ஆகஸ்ட் 23 அன்று இந்த வரைவ ு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2007 அக்டோபர் 1 அன்று வர்த்தக அமைச்சகத்தின் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கும் இந்த வரைவ ு அனுப்பப்பட்டது.

2008, மார்ச் 19 அன்று நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. இந்த வரை‌வி‌ல ் கூறப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் மற்றும் நோக்கங்களை நிலைக்குழு பொதுவாக ஏற்றுக் கொண்டதோடு வரை‌வி‌ன ் அனை‌த்த ு ‌ பி‌ரிவுகளையு‌ம ் ஒத்துக் கொண்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments