Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 20 முதல் நாடு முழுவதும் லாரி வேலை ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (00:41 IST)
த‌ங்களுடைய கோ‌ரி‌க்கைகளை ம‌த்‌திய அரசு ‌நிறைவே‌ற்றா‌வி‌ட்டா‌ல் நாடு தழு‌விய அள‌வி‌ல் காலவரைய‌ற்ற வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடுவோ‌ம் எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய மோ‌ட்டா‌ர் ச‌ங்க அமை‌ப்பு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காதது குறித்து ‌விவா‌தி‌க்க அகில இந்திய மோட்டார் சங்க பிரதிநிதிகளின் அவசர கூட்டம் டெல்லியில் நடந்தது.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், சுங்கச் சாவடிகளில் விதிக்கப்படும் சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தவும், லாரிகளுக்கான டயருக்கு 35 ‌விழு‌க்காடு விலை குறைப்பு, லாரிகளுக்கு வங்கியில் பெற்ற கடனை செலுத்த ஆறு மாத அவகாசம், ஆறு மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி, இந்தியா முழுவதும் லாரிகளை இயக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளையும் மோட்டார் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

கூட்டத்துக்கு பின் பே‌சிய அகில இந்திய மோட்டார் சங்க அமைப்பின் தலைவர் சரண்சிங் லெஹரா, டிசம்பர் 20-‌ம் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைக‌ளை ம‌த்‌திய அரசு நிறைவே‌ற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற லா‌ரிக‌ள் வேலை நிறுத்தத்தை ம‌த்‌திய மத்திய அரசு சந்திக்க நேரிடும் எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments