Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடன்குளத்தில் மேலும் 4 அணு உலைகள்: இந்தியா-ரஷ்யா திட்டம்!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (18:08 IST)
ரஷ்யாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு பணிகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அந்நாட்டின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள கூடன்குளத்தில் மேலும் 4 புதிய அணு உலைகளை நிர்மாணிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் இந்தியா வரும் போது கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் ருப்னிகோவ் புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் டிசம்பர் 5ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் இந்திய-ரஷ்ய வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் மெட்விடேவ், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது, கடந்த பிப்ரவரியில் இருநாடுகளும் ஏற்கனவே மேற்கொண்ட பேச்சுகளின்படி கூடன்குளத்தில் புதிதாக 4 அணு உலைகள் நிறுவுவதற்கான வரைவு ஒப்பந்தத்தில் ரஷ்யா கையெழுத்திடும் என்றார்.

கடந்த 1988இல் இந்தியாவும், ரஷ்யாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கூடன்குளத்தில் 2 அணு உலைகளை ரஷ்யா நிர்மாணித்து வருகிறது. இந்த அணு உலைகள் அடுத்தாண்டு முதல் மின் உற்பத்தியைத் துவக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments