Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. ஆழ்துளை கிணற்றில் சிறுவன்; மீட்க முயற்சி!

Webdunia
ஞாயிறு, 9 நவம்பர் 2008 (01:39 IST)
உத்தரப்பிரதே ச மாநிலம ் கனோஜ ் மாவட்டம ் பாவர்கட ா கிராமத்தில ் 24 அட ி ஆழம ் கொண் ட ஆழ்துள ை கிணற்றில ், விழுந் த 7 வயத ு சிறுவ ன மீட்கும ் பணியில ் காவல்துறையினரும ், தீயணைப்புப ் படையினரும ் ஈடுபட்டுள்ளனர ்.

பாவர்கடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் என்பவரின் மகன் புனீத் (வயது 7). இச்சிறுவன் சனிக்கிழமையன்று தனது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

அந்த கிணறு 24 அடி ஆழம் கொண்டது. ஒரு அடி அகலத்துடன் குறுகலாக உள்ளது. சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் போலீசாரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் ராணுவத்தின் உதவி கோரப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபோன்ற ஆழ்துளை கிணறு தோண்டப்படும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. சிறுவர்கள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து உயிரிழப்பதும் அல்லது மீட்கப்படுவதும் தொடர்கதையாகி வருவது வருந்தத்தக்கது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு.!!

2-ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த ஆசிரியர்கள் - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

ராகுல் காந்தி துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதி: பிரபல நடிகர் பாராட்டு..!

பிரதமரை அடுத்து சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய ஆலோசனையா?

இன்றிரவு எத்தனை மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Show comments