Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்தாக்கரே-க்கு எதிராக கொலைவழக்கு!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (01:11 IST)
பாட்னாவைச் சேர்ந்த ராகுல்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர், சிவ சேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோருக்கு எதிராக பாட்னா மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கொலைவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாட்னா பல்கலைக்கழக பேராசிரியர் வினய்குமார் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறையினரால் என்கவுன்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்ட ராகுல்ராஜின் உடல் 2-ஆவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அவசரமாக தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்முறையாக பிரேதப் பரிசோதனையும் வீடியோ எடுக்கப்படவில்லை என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

இந்த நடைமுறை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறியிருக்கும் வினய்குமார், இதுதொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர், வினோபா நகர் காவல்நிலைய பொறுப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், ராஜ்தாக்கரே, பால்தாக்கரே, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை வரும் 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments