Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசுடன் கூட்டணி இல்லை: தேவகவுடா!

Webdunia
ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (02:29 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் உடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் தேவகவுடா, அடுத்த சட்டமன்றத் தேர்தலின் போது பகுஜன்சமாஜ் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

மேலும், சமாஜ்வாடி, தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் மாநிலத்திலும், மத்தியிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை, சிறய பொதுத் தேர்தல் போலவே கருதுவதாக தெரிவித்த அவர், இதில் கிடைக்கும் முடிவுகள், மக்களவைத் தேர்தலின் போதும் எதிரொலிக்கும் என தேவகவுடா குறிப்பிட்டார்.

மேற்கூறிய 6 மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிரான நிலை நிலவுவதால், அங்கு மாற்று அரசியல் கட்சியை மக்கள் விரும்புவதாக அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் 73 நாடுகளின் தூதுவர்கள்.. கூடுதல் பாதுகாப்பு..!

நேர்மையற்ற மனிதர்கள் பட்டியலில் மோடி, ராகுல் காந்தி: ஆம் ஆத்மியின் சர்ச்சை அறிவிப்பு..!

தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ.. புதுவை சபாநாயகர் கருத்தால் பரபரப்பு..!

76வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றிய கவர்னர்! 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு!

Show comments