Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஸ்முன்ஷி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (23:15 IST)
இருதயக் கோளாறு காரணமாக புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் மருத்துவர் வினீத் சூரி கூறுகையில், அவரது மருத்துவ நிலை கவலைக்கிடமாகவே உள்ளதால், உயிர்காப்பு உபகரணங்களின் கவனிப்பிலேயே அவர் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார ்

சுவாசம், இருதயக் கோளாறு காரணமாக கடந்த 13ஆம் தேதி அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்ட அமைச்சர் தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து 11வது நாளாக (இன்று) கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது இடதுபுற இருதயம் முற்றிலுமாக இயங்காத நிலையில் இருந்தது. இந்நிலையில் அவரது மூளைக்கு போதிய பிராணவாயு கிடைக்காததால், முக்கிய உடல் பாகங்களை இயக்கும் மூளைப் பகுதியான ஹிபோக்ஸியா ( hypoxi a) பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவர் வினீத் சூரி, இதன் காரணமாகவே அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக விளக்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments