Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலையைக் குறைக்க அரசு முடிவு!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (18:11 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தால், சாதாரண மக்களுக்கு அது தீபாவளிப் பரிசாக அமையும்.

இதுகுறித்து மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, இதுகுறித்து அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலரில் இருந்து 67 டாலராக குறைந்திருப்பதால், மத்திய அரசு ஏற்கனவே அளித்த உறுதியின்படி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மக்கள் பணத்தில் இருந்து விமான நிறுவனங்களுக்கு சலுகைத் திட்டங்கள் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இதனை தியோராவும், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலும் மறுத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments