மகாராஷ்டிர அரசு வழங்கும் பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை, என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.
PTI Photo
FILE
மகாராஷ்டிர அரசின் சார்பில் ராஜ்தாக்கரேவுக்கு இதுவரை வழங்கப்பட்ட “இசட ் ” பிரிவு பாதுகாப்பு, தற்போது “ஒய ் ” பிரிவு பாதுகாப்பாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைக் கேட்ட பின்னர் ராஜ்தாக்கரே இவ்வாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ராஜ்தாக்கரேவுக்கு அம்மாநில அரசு வழங்கிய “இசட ் ” பிரிவு பாதுகாப்பில், 4 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரும், ஒரு அலுவலரும் அவருக்கு உடனிருந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர். ஆனால் தற்போது “ஒய ் ” பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.