Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாள் சு‌ற்று‌ப் பயணமாக ஜ‌ப்பா‌ன் செ‌ன்றா‌ர் மன்மோகன்சிங்!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (12:21 IST)
பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இத‌ற்கா க இ‌ன்ற ு கால ை அவ‌ர ் ஜப்பான் தலைநகர் டோக்கியோ புற‌ப்ப‌ட்டு‌ச ் செ‌‌ன்றா‌ர ்.

PTI PhotoFILE
ஜப்ப ா‌ னி‌ல ் 22, 23 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொ‌ள்ளு‌ம ் ‌ பிரதம‌ர ் மன்மோகன்சிங் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அ‌ந்நா‌ட்டு‌ பிரதமர் டாரோ ஆசோவையு‌ம் சந்தித்து பேசுகிறார்.

‌ பிரதம‌ரி‌ன ் இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கும் இடையேயா ன தடையற்ற வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்‌பா‌ர்‌க்‌க‌ப்படு‌கிறத ு. ஜப்பான் மன்னர் அகிட்டோவையும் மன்மோகன்சிங் சந்தித்து பேசுகிறார்.

இதை‌த்தொட‌ர்‌ந்த ு 23 ஆ‌ம ் தேதி (வியாழக்கிழமை) இரவு ஜப்பானில் இருந்து புற‌ப்படு‌ம் ‌பிரதம‌ர் மன்மோகன்சிங் சீன தலைநகர் பீஜிங் செல்கிறார். அ‌ங்கு 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் 45 நாடுகளைக் கொண்ட ஆசியா-ஐரோப்பா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களையு‌ம் ச‌ந்‌தி‌த்து‌ப் பேச உ‌ள்ள ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங், ஜ‌ப்பா‌ன், ‌சீனா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 25ஆ‌ம் தேதி இரவு பீஜிங்கில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments