குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மின்னஞ்சலில் 5 மிரட்டல்கள் வந்துள்ளதால் பாதுகாப்பு முகமையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் பிரதீபா பாட்டீல் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளதோடு கடும் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த ஞாயிறன்று பிரதீபா பாட்டீலுக்கு வந்துள்ள மின்னஞ்சல் ஒன்று தமிழ் நாட்டிலிருந்து வந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து மின்னஞ்சல்களும் குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை செய்து வரும் அதிகாரிகள் இந்த மின்னஞ்சல்களை அனுப்பியவர் மன நிலை சரியில்லாதவராக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக காவல்துறையை விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த மின்னஞ்சல்களை அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.