Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்புப் படையினர் சம்பளப் பிரச்சினைக்குக் குழு

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2008 (14:27 IST)
ஆறாவது ஊதியக் குழுவில் ராணுவப் படையினருக்கான சம்பள விகிதம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து, ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 3 பேர் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டிருப்பதாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து தற்போதைக்கு திருத்தியமைக்கப்பட்ட சம்பளங்களைப் பெற்றுக் கொண்டு, திங்கட்கிழமையன்று பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அக்டோபர் மாதத்திற்கான சம்பள கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் முடிவு செய்யப்பட்டிருப்பதாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆறாவது ஊதியக்குழுவின் படி வரையறுக்கப்பட்ட சம்பளங்களை ராணுவப்படையினர் நேற்று பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மேலும் அக்டோபர் மாதத்திற்கான ஊதியக் கோரிக்கையையும் சமர்ப்பிக்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து ராணுவப் படையினரின் ஊதியக் குழு தொடர்பான கவலைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்து 3 பேர் குழுவை நியமித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி தவிர பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சம்பளத்தை பெற்றுக் கொள்ளவும் பாதுகாப்புப் படையினர் ஒப்புக்கொண்டனர்.

ஆறாவது ஊதியக்குழுவின்படி, பாதுகாப்புப் படையினர் அனைவருக்கும் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று 40 விழுக்காடு சம்பள நிலுவைத் தொகை கிடைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments