Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துறைமுக தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை: டி.ஆர். பாலு அனும‌தி!

Webdunia
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (18:41 IST)
முக்கிய துறைமுக பொறுப்புக் கழகங்கள ், கப்பல் தள தொழிலாளர்கள் வாரியங்களின் பணியாளர்களுக்கு 2007-08 ஆ‌ம ் ஆண்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழ‌ங் க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு அனும‌தி அளித்துள்ளார்.

சராசரியாக கப்பல்கள் வரும் நேரம், சராசரியாக கப்பல் தளத்தின் ஒரு நாள் பண ி, கையாளும் கட்டணம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கணக்கிடப்பட்டு இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும ்.

2007-08 ஆ‌ம ் ஆண்டுக்கான வருடாந்திர ஊதியத்தில் 19.96 விழுக்காடு ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். இதனால் சுமார் 66,000 துறைமுக மற்றும் கப்பல் தள தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பெறுவர்.

ஒவ்வொரு தொழிலாளரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்பட ி, ஊக்கத் தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கணக்கிடப்படவுள்ளது.

இதனால் ஒவ்வொரு பணியாளரும் அதிகபட்சமாக ரூ.5,988 பெறவுள்ளார்கள். இதற்கு சுமார் ரூ.39.52 கோடி செலவாகும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர். பாலு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? ரயில் முன்பதிவு குறித்த முக்கிய தகவல்..!

மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால் நீங்கள் எதற்காக ஆட்சியில் இருக்கீங்க: ராமதாஸ்

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

Show comments