Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்: ஏ.டி.எ‌ம். சேவை முட‌‌ங்கு‌கிறது!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (09:25 IST)
வ‌ங்‌கிகளை இணை‌க்க‌க் கூடாது எ‌ன்பது உ‌ள்பட ப‌‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி, நாடு முழுவது‌ம் பொது‌த்துறை ம‌ற்று‌ம் த‌னியா‌ர் வ‌ங்‌கி ஊ‌‌‌‌‌ழிய‌ர்க‌ள் இ‌ன்று முத‌ல் இர‌ண்டு நா‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். இதனா‌ல் ஏ.டி.எ‌ம். சேவை முட‌ங்கு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், 10 லட்சம் வங்கி ஊழியர்களை உறுப்பினராக கொண்ட 9 தொழிற்சங்கங்களின் அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கலை எதிர்த்தும், ரகுராம் ராஜன் ஆணைய‌ம், ஹோடா ஆணைய‌த்‌தி‌ன் பரிந்துரைகளை நிராகரிக்கக் கோரியும், வங்கிகள் இணைப்பை எதிர்த்தும், ஒப்பந்தங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றக்கோரியும், 9-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தக்கோரியும் இன்றும், நாளையும் 2 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று காலை சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வியில் முடிவடைந்ததால், இந்த போராட்டம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது திணிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்'' எ‌ன்று பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அத‌ன்படி 10 ல‌ட்ச‌ம் வ‌‌ங்‌கி‌ ஊ‌‌‌‌ழிய‌ர்க‌ள் இ‌ன்று காலை முத‌ல் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர். நாடு முழுவது‌ம் 36 ஆ‌யிர‌ம் ஏ.டி.எ‌ம். மை‌ய‌ங்க‌‌ள் உ‌ள்ளன. இ‌தி‌ல் 30 ஆ‌யிர‌த்து‌க்கு மேலாளவை பொது‌த்துறை ம‌ற்று‌ம் த‌னியா‌ர் வ‌ங்‌கிகளு‌க்கு உ‌ரியவை. ம‌ற்றவை அய‌ல்நா‌ட்டு த‌னியா‌ர் வ‌ங்‌கிகளு‌க்கு உ‌ரியவை.

ஏ.டி.எ‌ம்.க‌ளி‌ல் பண‌த்தை ‌நிர‌ப்ப ஊ‌‌‌ழிய‌ர்க‌ள் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள் எ‌ன்பதா‌‌‌ல் அத‌ன் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌டு‌ம். செ‌ன்னை‌‌யி‌ல் இ‌ன்று வ‌ங்‌கி ஊ‌ழிய‌ர்க‌ள், அ‌திகா‌ரிக‌ள் ப‌ங்கேற‌்று‌ம் பேர‌ணி நடைபெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments