Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா, பிரான்ஸ் சுற்றுப்பயணம்: பிரதமர் புறப்பட்டார்!

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2008 (13:33 IST)
அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், இந்தப் பயணத்தின் போது இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தப் பேச்சுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

PTI PhotoFILE
புதுடெல்லி விமான நிலையத்தில் சுற்றுப்பயண‌த்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ஐ.நா உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளை முன்னேற்றத் தேவையான நடவடிகைகளை பெற சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைப் பெறுவேன் என்றும், சர்வதேச பிரச்சனைகளான உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, தீவிரவாதம் மற்றும் புத்தாயிரத்தாண்டு வளர்ச்சி இலக்குகளை குறித்து எடுத்துரைப்பேன் என்றும் கூறினார்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு வரும் 25ஆ‌ம் தே‌தி செல்லும் பிரதமர், அ‌ந்நா‌ட்டு அ‌‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்ஷைச் ச‌ந்‌தி‌த்து இ‌ந்‌‌திய-அமெ‌ரி‌‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌‌ம் கு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பதுடன், இருநா‌ட்டு பாதுகா‌ப்ப ு, வ‌ர்‌த்தக உறவுக‌ள் ப‌ற்‌றியு‌‌ம் பே‌சுவார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

இதையடு‌த்து 26ஆ‌ம் தே‌தி ‌நியூயா‌ர்‌க்‌கி‌ல் நட‌க்கும் 63வது ஐ.நா பொது அவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் உரையா‌ற்று‌ம் ‌பிரதம‌ர், அக்கூட்டத்திற்கு வரும் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ஆ‌சி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரி மற்றும் சீனாவைச் சேர்ந்த தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.

பி‌ன்ன‌ர் ‌பிரா‌ன்‌ஸ் செ‌ல்லு‌ம் ‌பிரதம‌ர், 29ஆ‌ம் தே‌தி மா‌ர்‌சி‌லி நக‌ரி‌ல் நட‌‌க்கு‌ம் இ‌ந்‌தியா- ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய மாநா‌ட்டி‌லு‌ம ், 30 ஆ‌ம் தே‌தி பா‌ரீ‌சி‌ல் நட‌க்கும் இ‌ந்‌தியா-பிரா‌ன்‌ஸ் இருதர‌ப்பு மாநா‌ட்டிலு‌ம் ப‌ங்கே‌ற்று‌ப் பேசு‌கிறா‌ர்.

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments