Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் முக்கிய பகுதிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள்: ப சிதம்பரம்!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (12:36 IST)
பல்வேறு துறைகளிலும் தகுதி, திறமை வாய்ந்தவர்களை உருவாக்கும் வகையில் நாட்டின் முக்கிய பகுதிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

பல்வேறு துறைகளிலும் தகுதி, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களை உருவாக்கும் நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்.எஸ்.டி.சி) என்ற நிறுவனத்தை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது.

இதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பே‌சி ய அவ‌ர ், எல்லா துறைகளிலும் தகுதி, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு நல்ல வரவேற்பும் பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. தகுதி, திறமையுடன் துறையில் போதிய அனுபவம் வாய்ந்தவர்களை நாம் அதிகளவில் உருவாக்க வேண்டும்.

அவர்கள் முழு திறமையுடனும் சர்வதேச தரத்திலான தகுதி, அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு நாட்டின் முக்கிய நகரங்களில் தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை 2009ஆ‌ம் ஆண்டு மார்ச் 31ஆ‌ம் தேதிக்குள் அதிகளவில் அமைத்து முழு வீச்சில் செயல்படத் தொடங்க வேண்டும்.

இந்திய பொருளாதாரத்துக்கேற்ப மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் தேவையை சமாளிக்கும் வகையில் திறமையானவர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது.

திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு 2008-09ஆ‌ம் ஆண்டு ‌நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி சில ஆண்டுகளில் ரூ.15,000 கோடி என்ற அளவில் உயர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து செயல்பட வேண்டும் எ‌ன்ற ு ப சிதம்பரம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments