Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (13:40 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சனியன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துள்ள நிலையில், 2 தீவிரவாதிகள் சிறப்பு காவல்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அபு பஷாரை நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தாங்கள் ஜமியா நகர் பகுதியில் கலிலுல்லா மசூதிக்கு அருகே 4 அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருந்ததை பஷார் ஒப்புக்கொண்டான்.

இதன் அடிப்படையில், பஷார் குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் இன்று சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு 5 தீவிரவாதிகள் பதுங்கி இருந்ததும் தெரியவந்ததாக சிறப்பு காவல்படையின் இணை ஆணைய‌ர் கர்னெய்ல் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தீவிரவாதிகளுக்கும், சிறப்பு படையினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் தீவிர துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 காவல்படையினர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

இறந்த தீவிரவாதிகளில் ஒருவன் அகமதாபாத், டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட அடிக் மற்றும் மற்றொருவன் அவனது கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்த 3 தீவிரவாதிகளில் ஒருவரை காவல்படையினர் கைது செய்ததாகவும், மீதமுள்ள இருவர் தப்பி விட்டதாகவும் கர்னெய்ல் சிங் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments