Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (19:24 IST)
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செ‌ய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் ( ஒ. எம ். எஸ ். எஸ ்.) கீழ் இது வழங்கப்படுகிறது.

இதில் தமிழகத்துக்கு 50 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு குவிண்டாலுக்கு ரூ.1,154 என்றும் இந்திய உணவு கழகத்தின் உயர் நிலைக்குழு விலை நிர்ணயித்துள்ளது.

அந்தந்த மாநி ல, யூனியன் பிரதேச அரசுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு கோதுமையை இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து பெற்று தங்களது பொது வினியோக கழகங்கள், கூட்டுறவு அங்காடிகள், அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக பொது மக்களுக்கு வழங்க மத்திய உணவ ு, பொது வினியோக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கல்வி நிறுவனங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின பெண்கள் விடுதிகள் ஆகியவற்றுக்கும் இதை வழங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையை மாவு மில்கள், பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியோருக்கு வழங்கக்கூடாது. அவர்களுக்கு கோதுமை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவு‌ம ், இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எ‌ன்று‌ம ் மத்திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments