Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி வசதி ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (16:38 IST)
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 கிராமங்களுக்கு பொது தொலைபேசி வசதியை அளிக்கும் திட்டத்தை அரசு விரைவில் துவக்க உள்ளது.

இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் பொது தொலைபேசி வசதியைப் பெறுகின்றன. இத்திட்டத்திற்காக தொலைத் தொடர்புத் துற ை, ப ி. எஸ ். என ். எல ். நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளது.

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 100 பேருக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள கிராமங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பொது தொலைபேசி இணைப்பு அடுத்த ஆண்டு இறுதிக்குள் அளிக்கப்படும ்.

பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு வசதியற்ற 66,822 கிராமங்களில் மானியக் கட்டணத்தில் பொதுத் தொலைபேசி வசதியை அளிக்கும் திட்டத்தை அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகின்றது. இதில் 54,700 கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள கிராமங்களுக்கு நடப்பாண்டு இறுதிக்குள் தொலைபேசி வசதி வழங்கப்படும்.

இந்த பழைய திட்டத்தில் 100க்கும் குறைவான மக்கள்தொகை உள்ள கிராமங்கள், அடர்ந்த காடுகளில் உள்ள கிராமங்கள் ஆகியவை தவிர அனைத்து கிராமங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சுமார் 5,000 தொலைதூர கிராமங்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராம பொதுதொலைபேசி இணைப்பு தரப்பட்டுள்ளது.

ப ி. எஸ ். என ். எல ். நிறுவனம் நாட்டிலுள்ள 5.5 லட்சம் கிராமங்களுக்கு தொலைபேசி வசதியை அளித்துள்ளது. 30,500 கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை ( Broadband) இணைப்பை தந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments