Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான பயண முகவர்கள் வேலை நிறுத்தம்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (14:08 IST)
விமான போக்குவரத்து நிறுவனங்கள், அதன் முகவர்களுக்கு கொடுத்துவந்த கமிஷனை நிறுத்துவதை எதிர்த்து இன்று நாடு முழுவதும் விமான பயண முகவர்கள் ( Travel Agents) வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

டிராவல் ஏஜண்டுகள் என அழைக்கப்படும் விமான பயண முகவர்கள் விற்பனை செய்யும் பயணச் சீட்டின் (டிக்கட்) விலையில் குறிப்பிட்ட விழுக்காடு முகவர்களுக்கு கமிஷனாக வழங்கி வருகின்றன. இதை விமான போக்குவரத்து நிறுவனங்கள் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் விமான பயண முகவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து இந்திய விமான டிக்கட் முகவர்கள், ( Travel Agents Association of India) தமிழ் நாடு கிளையின் தலைவர் ஆர்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விமான போக்குவரத்து நிறுவனங்கள் அக்டோபர் மாதம் முதல் முகவர்களுக்கு வழங்கும் கமிஷனை நிறுத்துவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளன. இதனால் இவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.

இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட 3 ஆயிரம் விமான பயண முகவர்கள் உள்ளனர். இதில் கிடைக்கும் வருவாயை நம்பி 80 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. விமான டிக்கட்டுகளின் மொத்த விற்பனையில் 94 விழுக்காடு முகவர்கள்தான் விற்பனை செய்கின்றனர்.

விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக, முகவர்களக்கு கொடுக்கும் கமிஷனை படிப்படியாக குறைத்து
வந்துள்ளன. 2001 ஆம் ஆண்டில் 9 விழுக்காட்டில் இருந்து ஏழு விழுக்காடாக குறைத்தனர். இதை மேலும் 2005 ஆம் ஆண்டு 5 விழுக்காடாக குறைத்தனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விமான போக்கு வரத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள், முகவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைப்பது என்று விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தன. ஆனால் இது வரை இந்த குழு அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

விமான போக்குவரத்து நிறுவனங்கள் அதன் முகவர்களை டிக்கட் வாங்கும் பயணிகளிடமே சேவை கட்டணத்தை வசூலித்து கொள்ளுமாறு கூறுகின்றன.

அத்துடன் விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள போட்டியால், செலவை குறைக்க இணையம் மூலம் நேரடியாக பயணிகளுக்கே டிக்கட் விற்பனை செய்வதை ஊக்குவித்து வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments