Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசா‌யிகளு‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கடித‌ம்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (20:02 IST)
‌ விவசாய‌க ் கட‌ன்களை‌த ் த‌ள்ளுபட ி செ‌ய்ததை‌ச ் சு‌ட்டி‌க்கா‌ட்ட ி, வரு‌கி ற ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் கா‌ங்‌கிரசு‌க்க ு வா‌க்க‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி ஒ‌வ்வொர ு ‌ விவசா‌யி‌க்கு‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கடித‌ம ் எழு‌‌தியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்த‌க ் கடித‌ம ் ‌ விரை‌வி‌ல ் ‌ விவசா‌யிகளை‌ச ் செ‌ன்றடையு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ தி‌க ் ‌ விஜ‌ய்‌சி‌ங ் கூ‌றினா‌ர ்.

நாடு முழுவதும் விவசாயிகளின் கடன் தொகை ரூ. 70 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இ‌ந்த விவசாயிகளின் பட்டியல் சில நாள்களில் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றார் திக் விஜய்சிங்.

கட‌ன் த‌ள்ளுபடி சலுகையை தேர்தல் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. கடன் தள்ளுபடி செய்த காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு மன்மோகன் எழுதியு‌ள்ள கடிதத்துடன் ஒவ்வொரு விவசாயியையும் நே‌‌ரி‌ல் சந்திக்க அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்ட பிரசாரம் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்குகிறது. கிராமப் புறங்களில் ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேரை காங்கிரஸ் உறுப்பினர்களாக்கவோ அல்லது காங்கிரஸ் ஆதரவாளர்களாக்கவோ திட்டமிட‌ப்ப‌ட்டுள்ளது.

கிராமப் பஞ்சாயத்து அளவில் இய‌ங்கு‌ம் கட்சிக் குழுக்களை, பிற்படுத்தப்பட்ட, தலித் பிரதிநிதிகள் அ‌திக‌ம் இடம் பெறும் வகையில் மாற்றியமைக்கவு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யின‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர்.

இதுதவிர கிராமப்புற வேலை உறுதித் திட்டம், தகவல் அறியும் சட்டம், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து மக்களிடம் பிரசாரம் செய்யவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments