Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்: சரத்பவார் தகவ‌ல்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (18:34 IST)
நுகர்வோருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என மத்திய விவசாயம், நுகர்வோர் நலன ், பொது வினியோகத் துறை அமைச்சர் சரத்பவார் கூற ியு‌ள்ளா‌ர்.

புது தில்லியில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் 24-வது கூட்டத்தை அவ‌ர் இன்று தொடங்கி வைத ்து பே‌சுகை‌யி‌ல், " நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த திருத்தங்கள் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிப்பதாகவும் சிறந்த செயலாற்றலுடன் கூடியதாகவும் இருக்கும்.

நாட்டில் நுகர்வோர் அமைப்புகளை ஏற்படுத்த திட்ட கமிஷனும் நிதி அமைச்சகமும் பட்ஜெட்டில் அதிக அளவு நிதியை ஒதுக்குகின்றன. நுகர்வோர் அமைப்புகளை கணினிமயமாக்குதல ், நெட்வார்க் மூலம் இணைக்கும் பணிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) தீவிரமாக செய்து வருகிறது.

இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜெர்மனி அரசுடன் இணை‌ந்து ஒரு திட்டம் நிறைவேற்றப்படுகிறது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இது முதலில் அறிமுகப்படுத்தப்படும ்" எ‌ன்று அமை‌ச்‌ச‌ர் சர‌த்பவா‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments