Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு: ப. ‌சித‌ம்பர‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (19:55 IST)
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் ப. ‌ சிதம்பரம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நியாயமாகவும் உடனுக்குடனும் ஊதியம் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க மத்திய நிதியமைச்சகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங்கிடம ், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்து‌ள்ளா‌ர்.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வங்கிகள் அல்லது அஞ்சலகங்கள் மூலமாக மட்டுமே ஊதியம் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதையடுத்து, ப ி. எஸ ். என ். எல ்., தேசிய தகவல் மையம் (என ்.ஐ. ச ி.) நிறுவனங்களுடன் சேர்ந்து ‌மி‌ன்னண ு முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை அஞ்சல் துறை உருவாக்கி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இத்தொழிலாளர்களுக்காக 1.10 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 2 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments