அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி சமாஜ்வாடி கட்சி தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறி, பா.ஜ.க. எம்.பி.க்கள் பணக்கட்டுகளைக் கொட்டியதையடுத்து எழுந்த பரபரப்பினால் தள்ளிவைக்கப்பட்ட மக்களவை, மீண்டும் 6 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நேற்று முதல் நடந்து வரும் விவாதத்தைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடக்கும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பா.ஜ.க. எம்.பி.க்கள் அவையில் பணத்தைக் கொட்டிய விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூட்டியுள்ளார்..