Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய மாநாட்டு கட்சி ஆதரவு: தேவகவுடா யார் பக்கம்?

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:36 IST)
மக்களவையில் இன்று நடைபெற உள்ள ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உமர் அப்துல்லாவின் இந்த முடிவ ு, மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்றிணைந்துள்ள எதிரணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானதால், இன்று மாலை நடைபெறும் வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து அவர் வாக்களிப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments