Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிராக வாக்களிப்போம் - அசாம் கன பரிஷத்

Webdunia
ஞாயிறு, 20 ஜூலை 2008 (12:41 IST)
நாங்கள் எந்த பிரச்சினையையும் முன்வைக்கவில்லை. ஆனாலும் ஆளும் கட்சிக்கு எதிராகவே எங்களது உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அசாம் கன பரிஷத் கூறியுள்ளது.

புதுடெல்லியில் இன்று பிடிஐ செய்தியாளர்களிடம் பேசிய அசாம் கன பரிஷத் தலைவர் பிரிந்தாபன் கோஸ்வாமி, எந்த பிரச்சினையையும் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். எங்களது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண் சர்மா, சர்பானாந்தா சோனோவால் இருவரும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

கோஸ்வாமி, கட்சியின் இரண்டு பொதுச் செயலாளர்களுடனும் ஆலோசித்து வருகிறார். இன்று மாலை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேசிய பின்னர், மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர்வது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

அசாம் கன பரிஷத், டி.டி.பி. மற்றும் இதர கட்சிகள் இணைந்து பணியாற்றும். மக்களுக்கு எதிரான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வீழ்த்து வேண்டும். நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

Show comments