Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிர ஆளுநராக எஸ்.சி. ஜமீர் பதவியேற்றார்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (11:33 IST)
மகாராஷ்ட ிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட் ட எஸ்.சி.ஜமீர், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வதேந்தர் குமார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பதவி விலகியதைத் தொடர்ந்து, கோவா ஆளுநராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்த ஜமீர், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இதற்கிடையில், கோவா ஆளுநராக ஷிவிந்தர் சிங் சித்து நியமிக்கபட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்பில் இருந்து ஜமீர் விடுவிக்கப்பட்டு, மகாராஷ்டிரா ஆளுநராகியுள்ளார்.

கடந்த 8ஆம் தேதி மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜமீர், இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments