Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌‌ரீ‌மிய‌ம் பெட்ரோலை விற்க பெட்ரோல் நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (12:13 IST)
மலிவு விலை பெட்ரோலுக்கு பதிலாக அதிக விலை பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் வற்புறுத்தினால் அதிக விலை பெட்ரோல், டீசல் விற்பதையே நிறுத்தி விடுவோம் என்று அனைத்திந்திய பெட்ரோல் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகிய பெட்ரோல் நிறுவனங்கள் 300 கிலோ லிட்டர்கள் விலை உயர்‌ந்த ‌பி‌ரீ‌‌மிய‌ம் பெட்ரோல், டீசல்களை பெட்ரோல் நிலையங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றன.

இது குறித்து அனைத்திந்திய பெட்ரோலிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் அசோக் பத்வார் கூறுகையில், விலை உயர்ந்த பெட்ரோல், டீசலை குறைந்தது 50 விழுகாட்டாவது பெட்ரோல் நிலையங்கள் விற்கவேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சாதாரண எரிபொருளைக் காட்டிலும் இந்த பிராண்டட் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகமாக உள்ளது. வாடிக்கையாளர்களை நாம் இந்த பெட்ரோலைத்தான் வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது என்று கூறினார்.

மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோராவை சந்தித்த பிறகு அசோக் பத்வார் இதனை தெரிவித்தார்.

இது குறித்து பொதுத்துறை நிறுவன அதிகாரிகளை அழைத்து பேசி ஒரு சுமுகமான தீர்வை எட்டலாம் என்று முரளி தியோரா நம்பிக்கை அளித்துள்ளதாக் அசோக் பத்வார் கூறினார்.

இதற்கு ஒரு தீர்வை மத்திய அரசு எட்டவில்லையெனில் ‌பி‌‌ரீ‌மிய‌ம் பெட்ரோல், டீசல் விற்பனையை முழுதும் நிறுத்தவேண்டிவரும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments