Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் சிறைகளில் அதிகரிக்கும் மரணங்கள்!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (11:31 IST)
பீகார் மா‌நிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் குறைந்தது இரண்டு நாளுக்கு ஒரு சிறைக்கைதி மரணமடைவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, 2007-ம் ஆண்டில் மட்டும் மா‌நிலம் முழுதும் உள்ள சிறைகளில் 180 கைதிகள் மரணமடைந்துள்ளனர். இரண்டு நாளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் சிறைக்கைதிகள் மரணம் நிகழ்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.

2005- ஆம் ஆண்டு 205 சிறைக்கைதிகளும், 2006-ஆம் ஆண்டு 175 கைதிகளும், 2007-ல் 180 கைதிகளும் மரணமடைந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 56 கைதிகள் மரணமடைந்துள்ளதாக சிறைச்சாலைப் பிரிவு ஐ.ஜி. சந்தீப் பாண்ட்ரிக் கூறுகிறார்.

ஆனால் இந்த மரணங்களுக்கு சிறை அதிகாரிகள் கையாளும் 3-ம் தர நடவடிக்கைகள் காரணமல்ல என்று கூறும் பாண்ட்ரிக், போதிய மருத்துவ வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு வசதியின்மைகளே காரணம் என்றும், வயதான கைதிகளே அதிகம் மரணமடைவதாகவும் கூறுகிறார்.

அதாவது மா‌நிலத்தில் உள்ள 54 சிறைச்சாலைகளில் 44,000த்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுமார் 24,000 கைதிகளை மட்டுமே அந்த சிறைச்சாலைகளில் அடைக்க முடியும். இதில் 1400 கைதிகள் 70-வயதைக் கடந்தவர்கள் என்று கூறும் பாண்ட்ரிக், இவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் இல்லை என்று கூறுகிறார்.

மேலும் மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று கூறும் சிறைச்சாலை ஐ.ஜி. பாண்ட்ரிக ், 65 மருத்துவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வெறும் 45 மருத்துவர்களே உள்ளனர் என்றும் பல சிறைகளில் மருத்துவ வசதி‌யின்மையே இந்த மரணங்களுக்கு காரணம் என்கிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 ஆண்டுகளுக்கு பின் வருகிறது ஆட்டோ உயர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி..!

திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்: தவாக தலைவர் வேல்முருகன்

ரஷ்ய தளபதியை நாங்கதான் கொன்றோம்.. ஒத்துக் கொண்ட உக்ரைன்! - பதிலடிக்கு தயாராகும் ரஷ்யா?

நேற்று ஒருநாள் உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments