Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு போக்குவரத்து மூல‌ம் ரயில்வே‌க்கு கூடுதல் வருமானம்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (16:05 IST)
சரக்கு போக்குவரத்து மூலமாக ரயில்வே துறைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் 10.8 சதவீதம் கூடுதலாக வருமா ன‌ ம் கிடைத்துள்ளது எ‌ன்ற ு அரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ரயில்வே துறை 2008-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 13.77 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் ரூ.8,996.29 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2007-ம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு போக்குவரத்தின் மூலமாக கிடைத்த ரூ.7,356.79 கோடியைவிட இது 10.87 சதவீதம் அதிகம்.

2008- ம் ஆண்டு மே மாதத்தில் நிலக்கரி போக்குவரத்தின் மூலம்தான் அதிக வருமானம் கிடைத்துள்ளது. 2.95 கோடி டன் நிலக்கரியை எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,617.60 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இரும்புத் தாது ரூ.975.54 கோடி, சிமென்ட் ரூ.375.24 கோடி, உணவு தானியங்கள் ரூ.337.98 கோடி, பெட்ரோலியப் பொருட்கள் ரூ.273.81 கோடி, இரும்பு எஃகு பொருட்கள் ரூ.232.30 கோடி, உரங்கள் ரூ.167.90 கோடி, எஃகு தொழிற்சாலைக்கான மூலப் பொருட்கள் ரூ.70.65 கோடி, கன்டெய்னர் சேவை மூலமாக ரூ.180.03 கோடி, இதர சரக்குகள் மூலமாக ரூ.365.58 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments